1859 இல் சார்லஸ் டார்வின் பரிணாமவளர்ச்சிக் கோட்பாட்டை உலகுக்கு அறிமுகபடுத்தினார். இக்கோட்பாட்டின் படி முதன்முதலில் கடலில் உயிரினங்கள் தோன்றின பின்னர் அவையே பரிணாம வளர்ச்சி அடைந்து மற்ற விலங்குகளாகவும் மனிதராகவும் மாறின. ஆனால் இது இந்தியர்களுக்கு புதியது அல்ல. மாறாக டார்வின்க்கு பல ஆயிரம் ஆண்டுகள் முன்னரே பரிணாமவளர்ச்சி பற்றி இந்தியர்கள்அறிந்து இருந்தனர் , இதை நாம் தசாவதாரம் என்று அழைக்கிறோம்
மச்சாவதாரம் - மீன்
முதன்முதலில் நீரில் உயிரினம் தோன்றியது.
கூர்மாவதாரம் - ஆமை
நீரில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டதும் நீரில் வாழும் உயிரினங்கள் நிலத்திற்கு தற்காலிகமாக வந்து செல்ல ஆரம்பித்தன.
வராக அவதாரம் - தாவர பட்சி
நிலத்தில் எந்த உயிரினமும் இல்லாததால் நீர் வாழ் உயிரினங்கள் நிலத்தில் உள்ள உணவுக்காகவும் பாதுகாப்புக்காகவும் நிலத்திலேயே தங்கி வாழ ஆரம்பித்தன .
நரசிம்ம அவதாரம் - மாமிசபட்சி
காலப்போக்கில் நிலத்தில் உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரித்ததும் , தாவரங்களுக்கு பற்றாக்குறை ஏற்ப்பட்டது. எனவே நில வாழ் உயிரினங்கள் ஒன்றை ஒன்று வேட்டையாடி உண்டன.
வாமன அவதாரம் - குள்ள மனிதன்
காலப்போக்கில் பரிணாமவளர்ச்சியில் குள்ளமனிதன் உருவாகிறான்.
பரசுராம அவதாரம் - கற்கால மனிதன்
பிறகு மனிதன் எளிமையான ஆயுதங்களான கோடாரி முதலியவற்றை பயன்படுத்தி வேட்டையாட ஆரம்பித்தான்.
ராம அவதாரம் - மேம்பட்ட கற்காலம்
அருகில் இருந்து கோடாரி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி வேட்டையாடுவது ஆபத்து நிறைத்தது. எனவே தொலைவில் இருந்து தாக்குதல் நடத்தும் படி வில்அம்பு முதலிய கருவிகளை மனிதன் கண்டறிந்தான்.
பால ராம அவதாரம் - விவசாயம் கண்டு பிடிக்கப்பட்டது
தாவரங்களை தேடி அலைவதைக் காட்டிலும் வசிப்பிடத்திற்கு அருகிலேயே வேண்டிய பயிர்களை பயிரிட்டு பழகினான் மனிதன்
கிருஷ்ணாவதாரம் - விலங்கு பண்ணைகள் , இசை , பற்சக்கரம் கண்டுபிடிப்பு
விவசாயத்தின் கண்டுபிடிப்பு, மனிதன் உணவு தேடி அலையும் நேரத்தை வெகுவாக குறைத்தது. எனவே மனிதன் தன் ஒய்யுநேரத்தில் இசையை கண்டறிந்தான். பின்னர் நாளடைவில் பற்சக்கரத்தை கண்டறிந்தான். பற்சக்கரத்தின் கண்டுபிடிப்பு எந்திரங்களின் காலத்தை கொண்டு வந்தது
கல்கி அவதாரம் - புதுயுக மனிதன்.
இறுதியில் மனிதன் வாழ்வை எளிமைபடுத்த்தும் நோக்கில் தன்னை இழந்து இந்த உலகத்தை மாசுபடுத்தி இந்த உலகத்தின் அழிவுக்கு வழி வகுக்கிறான்.